Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறுவன, வங்கித் தலைவர்களுடன் மோடி சந்திப்பு

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க இன்று (08.09.15) பிரதமர் நரேந்திர மோடி, நிறுவனங்கள் மற்றும் முக்கிய வங்கிகள் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.


பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் தலைமை தாங்கும் இக்கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி உட்பட பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்களும், முக்கிய வங்கிகளின் இயக்குனர்களும், நிர்வாகிகளும் கலந்துகொள்கிறார்கள்.


இச்சந்திப்பில் தொடர் சரிவைச் சந்தித்து வரும் பங்குச் சந்தை, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு தயாராவது, சீனாவின் பொருளாதார சூழ்நிலை போன்ற சர்வதேச பொருளாதார மாற்றங்களில் இந்திய பொருளாதார நிலையைப் பற்றி விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
 

வரும் நவம்பர் மாதம் நடக்கும் ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ள இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ