Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைனில் சொத்து வாங்குவது தொடர்பான ட்விட்டர் கேள்வி பதில்

இன்று (09.09.2015நாணயம் விகடன் ட்விட்டர்  கேள்வி பதில் பகுதியில்   ஆன்லைனில் சொத்து வாங்குவது குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தார்  கணேஷ் வாசுதேவன், சிஇஓ, இந்தியா பிராப்பர்டி ஆன்லைன் பிரைவேட் லிமிடெட்.


ஆன்லைனில் சொத்து வாங்குவது குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக.

 

 

1. பில்டரின் நம்பகத் தன்மையை ஆன்லைனில் சொத்து  வாங்கும் போது எப்படி தெரிந்துகொள்வது?  
 
Indiaproperty.com என்கிற வலைதளத்தில் பில்டர்களின் முழுமையான விவரங்கள் (எவ்வளவு புராஜெக்ட்கள் செய்திருக்கிறார்கள், எவ்வளவு ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறார்கள் போன்ற விவரங்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அவர்கள் மேற்கொண்ட புராஜெட்கள் குறித்த விவரங்கள், அவர்கள் அதை எந்த அளவு நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார் என்கிற ரிவ்யூ வீடியோக்கள் ஆகியவையும் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இதை பார்த்து தெரிந்து கொள்வதன் மூலம் நம்பகத்தன்மையான பில்டர்களை இனம் கண்டுகொள்ளலாம். இது தவிர சட்ட அடிப்படையிலான புராஜெக்ட் வெரிஃபிகேஷன் முத்திரை குறித்த விவரங்களைப் பார்த்தும் (அதாவது எந்தெந்த புராஜெக்ட்களில் வெரிஃபிகேஷன் முத்திரை இருக்கிறதோ அந்த புராஜெக்ட்கள் நல்ல புராஜெக்ட்கள் என்று அர்த்தம்) நம்பகத்தன்மையான பில்டர்களை தெரிந்து கொள்ள முடியும்.
 
2. ஆன்லைனில் சொத்து வாங்கும் போது புரோக்கர் கமிஷன் இல்லாததால், சொத்தை குறைந்த விலையில் வாங்கலாம் என்று சொல்வது உண்மையா? 
 
இன்றைய நிலையில் யார் ஒருவராலும் ஆன்லைனிலேயே முழு சொத்தையும் வாங்கிவிட முடியாது. ஆன்லைனில் அட்வான்ஸ் தொகையை செலுத்திவிட்டு, பின்னர் நேரடி முறையிலேயே அதை உறுதி செய்ய முடிகிறது. புதிதாக வாங்கும் சொத்து மனையாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் புரோக்கர் கமிஷன் கிடையாதே தவிர, மறுவிற்பனை (ரீசேல்) செய்யும் சொத்துகளுக்கு புரோக்கர் கமிஷன் உண்டு.
 
3.வில்லங்கப் பிரச்சனை, சொத்தின் மீது கடன் இருக்கிறதா போன்ற விபரங்களை ஆன் லைனில் சொத்து வாங்கும் பொது எப்படி தெரிந்து கொள்வது ?
 
வில்லங்கம் குறித்தும், சொத்தின் மீது கடன் இருக்கிறதா இல்லையா என்பது குறித்தும் ஆராயப்பட்டு indiaproperty.com வலைதளத்தில் 3,500 புராஜெக்ட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதை தாண்டிய புராஜெட்களுக்கு விசாரணை தேவைப்பட்டால், அதை எங்களுக்கு ஆன்லைன் மூலம் தெரிவிப்பதன் மூலம் எங்களின் வழக்கறிஞர்கள் குழு களமிறங்கி விசாரித்து அதை வழங்கும்.
 
4. ரியல் எஸ்டேட் வெப்சைட் (ஆன்லைன்) மூலம் எந்த வகையான சொத்துகளை வாங்க முடியும்.?

 

வீட்டு மனைகள், அப்பார்ட்மென்ட்கள், தனி வீடுகள் என அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கலாம். ஆனால் முன் பணத்தைச் செலுத்தி பிளாக் செய்து விட்டு, இதர விஷயங்களை  ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு  நேரில் சென்று பார்த்துதான் மேற்கொள்ள முடியும்.  அதிகபட்சம் 10 நாட்களுக்குள்  ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அணுகுவது அவசியம்.
 
5. ஆன்லைனில் சொத்து வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?
 
பில்டர்களின் நம்பகத்தன்மை, சட்ட ரீதியான விஷயங்கள், நீங்கள் சொத்து வாங்கும் இடத்திற்கு ஏற்ற விலைதானா என்பதை கட்டாயம் பார்க்க வேண்டும். சொத்து வாங்கும் இடமானது அனைத்து  வசதி வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறதா என்பதையும் பார்க்க மறக்கக் கூடாது. அதே போல அந்த இடத்திற்கான ரிவ்யூ எப்படி இருக்கிறது என்பதையும் பாருங்கள்.
 
 
6. நேரடியாக சொத்து வாங்குவதற்கும், ஆன்லைனில் சொத்து வாங்குவதற்கும் என்ன வித்தியாசம்?
 
நேரடியாக சொத்து வாங்கும்போது பலரிடம் விசாரிக்க வேண்டியிருக்கும், நேரம் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும், சொத்துக்களை வாங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டால் அதற்கான இன்ஷூரன்ஸ் போன்ற நடவடிக்கைகளையும் ஆஃப்லைனில் நேரத்தை விரையமாக்கி செய்து முடிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஆன்லைனில் அப்படியில்லை, குறிப்பாக indiaproperty.com வலைதளத்தை பொறுத்தவரை காலி மனையாக இருந்தாலும், கட்டி முடிக்கப்பட்ட வீடாக இருந்தாலும் 3டி முறையில் பார்த்துவிட முடியும். இந்த முறையின் மூலம் நேரடியாக இடத்திற்கு அல்லது வீட்டிற்குள் (கட்டி முடிக்கப்பட்ட, கட்டிக் கொண்டிருக்கும்) நடந்து சென்று பார்த்த உணர்வு ஏற்படும். இதற்காக வாரக் கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்காது. உட்கார்ந்த இடத்தில் ஓரிரு மணி நேரங்களை செலவு செய்தாலே பல மனைகள், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அலுப்பில்லாமல் மனநிறைவுடன் பார்த்துவிட முடியும். 
 
அதுமட்டுமில்லாமல் அதற்கான  வீட்டுக் கடன்  மற்றும் இன்ஷூரன்ஸையும் வலைதளத்தின் உதவியுடனேயே எடுத்துக் கொள்ளலாம். 

7. ஆன்லைனில் சொத்து வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்களை தேவைப்படும்.? 
 
ஆன்லைனில் சொத்தை வாங்க முடியாது. முன் பதிவுதான் செய்ய முடியும். எனவே, ஆவணங்கள் எதுவும் தேவைப்படாது.
 
8. ஆன்லைனில் முன் பணம் கொடுத்து சொத்தை பதிவு செய்யும் முன்செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன?
 
நீங்கள் கடன் வாங்கி சொத்து வாங்குவதாக இருந்தால், சொத்து பற்றிய விவரங்களை ஆன்லைனில் பார்க்கும் போது கடனுக்காகவும் பதிவு செய்து கொள்ளலாம். அப்படியில்லையெனில் சொத்து வாங்க தேவையான பணத்தை ஏற்பாடு செய்து கொள்வது அவசியம். முன்பதிவு செய்வதற்கு முன்னர் சட்ட ரீதியான விஷயங்களையும் தெளிபடுத்திக் கொள்வது நல்லது.
 
 
9. இந்திய சட்டங்கள் எந்த சொத்துக்களையாவது ஆன்லைனில் வாங்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறதா?
 
எனக்கு தெரிந்த வகையில், இந்திய சட்ட திட்டங்களில் ஆன்லைன் வாயிலாக சொத்துக்களை வாங்கக் கூடாது என்று சொன்னதாக தெரியவில்லை. சொத்துக்களை வாங்குவதற்காகத்தான் ஆன்லைனை பயன்படுத்திக் கொள்கிறோமே தவிர, ஆன்லைனிலேயே முழு சொத்தையும் வாங்குவதில்லை என்பதை நினைவில் கொள்க.
 
10. ஆன்லைனில் சொத்தை விற்க எவ்வளவு செலவாகும்?
 
வலைதளங்களில் சொத்துகளை விற்க இலவச சேவைகளும் இருக்கின்றன. இதை பயன்படுத்திக் கொண்டால் செலவு எதுவும் ஆகாது. அதே சமயம் கட்டணத்துடன் கூடிய சேவைகளும் இருக்கின்றன. இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் ஆகும். 
 
கட்டணச் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு indiaproperty.com சட்ட ரீதியான விஷயங்களில், சொத்து மதிப்பிடுவதில் சேவையை செய்து கொடுக்கும். இந்த சேவையானது சொத்துகளை விரைந்து விற்க ஏதுவாக இருக்கும்.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ