Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

இன்று காலை ஏற்றத்துடன் துவங்கிய இந்திய சந்தைகள் ஏற்றத்திலே முடிவடைந்தன.
அதாவது தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 130 புள்ளிகள் அதிகரித்து 7818 என்ற நிலையிலும்,  மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 401 புள்ளிகள் அதிகரித்து 25719 என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது. 
 
இன்றைய வர்த்தகத்தில் 1982 பங்குகளின் விலை உயர்ந்தும், 716 பங்குகளின் விலை குறைந்தும், 103 பங்குகளின் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமலும் வர்த்தகமானது. மேலும் என் எம் டி சி பங்கு இன்று ஒரு நாளில் மட்டும் 9 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஹிண்டால்கோ, என்டிபிசி, டாடா ஸ்டீல் ஆகிய பங்குகளின் விலை அதிகரித்தும், டெக் மஹிந்திரா, சன் பார்மா, கெயில், விப்ரோ ஆகிய பங்குகளின் விலை சரிந்தும் வர்த்தகமானது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ