Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதலீட்டு அறிவிப்புகள்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் தொழில்மைய வளாகத்தில் இன்று (09.09.15) தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பேசினார்.


அப்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில்  தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும், மேலும் தொழில் முதலீட்டுக்கு எற்ற இடமாகவும் தமிழகம் திகழ்வதாகவும் கூறினார். பின்னர் அனைத்து உலக நிறுவனங்களுக்கும் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்ட தொழில் முதலீட்டு அறிவிப்புகள்:


1. ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் பேசுகையில், தென் தமிழகத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.


2. தமிழகத்தில் யமஹா நிறுவனம் தனது மூன்றாவது தொழிற்சாலையை அமைப்பதாக தெரிவித்துள்ளது.


3. டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் ஒசூரில் ஒரு தொழிற்சாலையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.


4. டைசல் பயோ பார்க் தனது இரண்டாவது கிளையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.


5. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், தற்போது ரூ.2000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யப் போவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த முதலீடு 2022-ல் இருமடங்காகும் என்று கூறியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ