Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்களுக்கு அதிருப்தி அளித்த ஆப்பிள்

ப்பிள் நிறுவனம் இந்த நூற்றாண்டு மனிதர்களின் கனவுலகம் என்றால் மிகையாகாது. ஆப்பிள் ஐஃபோன், ஐபாட், ஆப்பிள் நோட்புக், ஆப்பிள் ஸ்மார்ட் டிவிம, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் என அதன் தயாரிப்புகளின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டிவி மற்றும் ஐபாட்-களின் செயல்திறன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான அனுபவத்தை தரவில்லை. ஆப்பிள் டிவிகளில் கொடுக்கப்படும் வாய்ஸ் கமாண்டுகளுக்கு கிடைக்கும் எதிர்வினை குறித்தும், அதன் ஐபாட் தொடுதிரையின் உணர்திறனும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.


ஆப்பிள் பங்குகள் 1.9% குறைந்து 110.15 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது. பிடிஐஜி ஆய்வு தகவல் படி, மூன்று ஆண்டுகளில் ஐஃபோன் அறிவிப்புகள் வெளியாகும் நாட்களில் அதன் பங்குகள் சராசரியாக 0.4% குறைந்து வர்த்தகமாகியுள்ளது.


இது குறித்து, ஃபர்ஸ்ட்ஹாண்ட் டெக்னாலஜி ஆப்பர்ச்சுனிட்டிஸ் ஃபண்ட் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ மேலாளர் கெவின் லாண்டிஸ் என்பவர் கூறுகையில் "மக்கள் ஆப்பிள் அறிவிப்புகளை வெறுக்க ஆரம்பித்துள்ளனர். அதன் மீதுள்ள அபரிமிதமான எதிர்பார்ப்புகள் ஆப்பிள் நிறுவனத்தால் நிறைவேற்ற முடியாமல் இருப்பதே இதற்கு காரணம்," என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ