Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மஹிந்திரா புதிய எஸ்யுவி கார் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ. 6.9 லட்சம்

மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா புதிய எஸ்யுவி கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. டியுவி 3OO என பெயரிடப்பட்டுள்ள அந்தக் காரின் விலை ரூ. 6.9 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.


இந்தக் கார், இரண்டு நிலை டர்போ சார்ஜர் கொண்ட 1.5 லிட்டர் எம்ஹாக் வகை எஞ்சின் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டில் டேங்க் வடிவமைப்பு, சாஸிஸ் வகை தளம். மூன்று வகையான வேரியண்டுகளில் ஆறு நிறங்களில் இந்தக் கார் கிடைக்கிறது. ஆர்டரின் பேரில் மட்டும் காம்பேட் கிரீன் நிறத்தில் உருவாக்கி தரப்படும்.


இந்த டியுவி 3OO (letter 'O') ஃபோர்ட் நிறுவனத்தின் ஈகோஸ்போர்ட்டுக்கும், ஹூண்டாயின் புதிய க்ரெடாவுக்கும், ரெனால்ட்டின் டஸ்டருக்கும் விற்பனை போட்டியை ஏற்படுத்தும்.


மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று (10.09.15) 0.62% உயர்ந்து ரூ. 1178 என்ற நிலையில் வர்த்தகமானது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ