Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூகுள் தருகிறது ஃப்ரீ ஒய்ஃபை

உலகின் முன்னணி தேடுதல் இயந்திரமான கூகுள் நம்மூர் இரயில்வேயுடன் சேர்ந்து 400 இரயில் நிலையங்களில் இலவச ஒய்ஃபை தரும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.


இலவச இன்டர்நெட் சேவை தரும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஃபைபர் எனும் திட்டம் அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவிலும் வர இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக கூகுள் நிறுவனம் இந்திய இரயில்வேயுடன் இணைந்து 'பிராஜக்ட் நீலகிரி' என்ற திட்டம் மூலம் இந்தியா முழுவதும் 400 இரயில் நிலையங்களில் இலவச ஒய்ஃபை பயன்பாட்டை தர இருக்கிறது.

இந்த இலவச ஒய்ஃபை சேவையைப் பயன்படுத்த பயணிகள் தங்கள் மொபைல் எண்ணை வெரிஃபை செய்த பின்னர் வரும் பாஸ்வேர்டை வைத்து ஒய்ஃபை சேவையில் இணைந்துகொள்ள முடியும். முதல் அரை மணி நேரத்திற்கு இன்டர்நெட் வேகமாகவும், பின்னர் வேகம் குறைந்து சீராக செயல்படும்.

ஆனால் இதற்கான வேலைகள் எப்போது தொடங்குகிறது என்ற அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இரயில்வே துறையிடமிருந்து கிடைக்கவில்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ