Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சத்யம் ஸ்கேம்' ராஜு ரூ.3200 கோடி திருப்பித்தர செபி உத்தரவு

'சத்யம் கம்ப்யூட்டர்ஸ்' மூலம் முறைகேடாக சேர்த்த ரூ. 1,803 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.3200 கோடியாக திருப்பித்தர வேண்டும் என்று அதன் தலைவர் பி ராமலிங்க ராஜுவுக்கு சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி உத்தரவிட்டுள்ளது.


'சத்யம்' என்ற பெயரை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் முறைகேடு மூலை முடுக்கெல்லாம் பரப்பப் பட்டது.  2009இல் முறைகேடாக பணம் சேர்த்ததில் சிக்கிய பிறகு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மூடக்கப்பட்டதோடு, அதன் தலைவர் ராஜு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஏழு ஆண்டுகளுக்கு சந்தையில் செயல்பட தடைவிதிக்கப்பட்டனர்.


2009இல் ராஜுவின் குடும்பம் மட்டுமல்லாமல், சத்யம் நிறுவனத்தின் இயக்குனர்கள், பணிபுரிந்த ஊழியர்கள் உட்பட அனைவருமே கணக்குகளை மிகைப்படுத்தி காண்பித்தால், தவறான தகவல்கள்  வெளியிடுதல், கணக்கு வழக்குகளை தவறாக வெளியிடுதல் என அனைத்து முறைகேடுகளிலும் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.


இந்நிலையில் தற்போது செபி அமைப்பு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடாக சேர்த்த பணத்திற்கு, ஜனவரி 7, 2009லிருந்து இதுவரையிலும் ஆண்டுக்கு எளிய வட்டி 12% கணக்கில் ரூ.3200 கோடியைத் திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ