Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமான சேவை நிறுவனங்களின் பங்குகள் விலை 9% உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் விமான சேவை நிறுவனங்களின் பங்குகள் விலை 9% வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.


இன்று (11.09.15) காலை மும்பை பங்குச் சந்தையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு விலை 9% உயர்ந்து ரூ. 25.20க்கும், ஜெட் ஏர்வேய்ஸ் பங்கின் விலை 7% உயர்ந்து ரூ. 333க்கும் வர்த்தகமாகியது.

இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் 2015 நிதி ஆண்டின் நிகரலாபம் 300% அதிகரித்துள்ளதாக முடிவுகள் வெளியாகின. இதற்கு அதன் குறைந்த எரிபொருள் செலவும், பயணிகள் அதிகரிப்பும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.


கடந்த 2014-15 நிதி ஆண்டு முடிவில் விமான சேவை நிறுவனங்களின் நிகர லாபம் ரூ. 584 கோடி. ஆனால் டிசம்பர் மாதம் வரையிலான இண்டிகோவின் நிகர லாபம் மட்டும் ரூ. 720 கோடி.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ