Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடம்பர ஆடி, ஏ6 35 கார் அறிமுகம்

ஜெர்மனைச் சேர்ந்த ஆடி கார் உற்பத்தி நிறுவனம் இன்று ஆடி, ஏ6 35 காரை ரூ. 45.9 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.


ஒரு மாதம் முன்புதான் ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் அடுத்த புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது ஆடி நிறுவனம். இந்த வருடத்தில் இது ஏழாவது அறிமுகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த ஏ6 35 ஆடி கார், புதிய 1.8 லிட்டர், நான்கு சிலிண்டர் எஞ்சின், அதிகபட்சமாக  190 குதிரைதிறன் கொண்டது. இதில் 7-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உள்ளது. மேலும் ஆற்றலை சேமிக்கும் தானியங்கி ஸ்டார்ட்/ஸ்டாப் செயலமைப்பும் இதில் உள்ளது.


"இதில் எரிபொருள் நுகர்வு 12.7% குறைந்துள்ளது. அதே சமயம் ஆற்றல் வெளிப்பாடு 5% அதிகம்," என்று இந்தியாவின் ஆடி நிறுவன தலைவர் ஜோ கிங் கூறினார்ரொரு லிட்டருக்கு 15.26 கிமீ எரிபொருள் செயல்திறன் கொடுக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ