Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உணவுப் பொருட்கள் விலைக்குறைவால் விவசாயிகள் பாதிப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண் கழகத்தின் அறிக்கைப்படி உலக உணவுப் பொருட்கள் விலை குறியீடு ஆகஸ்ட் மாதத்தில் 5.2% குறைந்துள்ளது. 2009 லிருந்து இதுவரையிலும் நடந்த அதிகபட்ச குறைவு இது. இதனால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


இந்த குறைவானது, உலகளவில் கமாடிட்டி பொருட்களின் விலை குறைந்து வருவதன் பின்னணியில் ஏற்பட்டுள்ளது. தானியங்களின் விலை குறியீடு 7% குறைந்துள்ளது, தாவர எண்ணெய் விலை குறியீடு 8.6%குறைந்துள்ளது மற்றும் பால் பொருட்களின் விலை குறியீடு 9.1% குறைந்துள்ளது. அதிகபட்சமாக சர்க்கரை 10% குறைந்துள்ளது.


உலகளவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்ததனால், வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் குறைந்தது. ரூபாய் மதிப்பு குறைந்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இது நுகர்வோர்களுக்கு மட்டும்தான் மகிழ்ச்சியை தருவதாக உள்ளது ஆனால் விவசாயிகளுக்கு இதனால் பாதிப்புதான். அதே நேரத்தில் வேளாண் உற்பத்தி குறைவாக இருந்தாலும் இவர்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படுவதில்லை என்பது மற்றுமொரு சோகமான செய்தி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ