Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆம்டெக் பங்கின் விலை 80 % உயர்வு!

 ஆம்டெக் பங்கின் விலை 80 % உயர்வு!

 
ஆம்டெக் ஆட்டோ பங்கின் விலை இன்றைய வர்த்தகத்தின் இடையே சுமார் 80 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து வர்த்தகமானது.  சில தினங்களாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து சரிந்துவந்தது. கடன் பிரச்னை மற்றும் செபியின் ஆய்வு போன்றவற்றினால் பங்கின் விலை சரிந்தது. 
 
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கடன் குறித்த தற்போதைய நிலையை அதன்  எம் டி ஜான் பிலித்தம்,''  வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனில் எந்தவிதமான தாமதமும் ஏற்படாது. ஏனெனில் ஓவர்சீஸ் பிசினஸை விற்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் புரோமோட்டர்கள் தொடர்ந்து ஆதரவாக இருப்பார்கள். மேலும் பணம் தேவைப்படும் நேரத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார். 

இதையடுத்து ஆம்டெக் பங்கின் விலையானது ரூ. 53.15 வரை அதிகரித்து 46.70க்கு வர்த்தகம் முடிவடைந்தது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close