Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால் டிராப் பிரச்னைக்கு அக்டோபரில் தீர்வு: டிராய்

போன் பேசிக்கொண்டிருக்கும்போதே இணைப்பு துண்டிக்கப்படும் 'கால் டிராப்' பிரச்னை சூடுபிடித்து வருகிறது. இதற்கு அக்டோபர் மாதத்தில் இறுதி தீர்வு எடுக்கப்படும் என டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார்.


டவர் கோளாறு மற்றும் சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே இணைப்பு துண்டிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்களுக்கும், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் (டிராய்) புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து கால் டிராப் தொடர்பான விவரங்களை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்குமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டது. மேலும் இவ்வாறு இணைப்பு துண்டிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் பிடிக்கக் கூடாது என்றும், நஷ்ட ஈடாக கூடுதல் டாக்டைம் அல்லது கூடுதல் தொகையை ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றும் கூறியது.


ஆனால் டெலிகாம் நிறுவனங்கள் இதற்கெல்லாம் காரணம், மொபைல் டவர்களை உள்ளூர்க்காரர்கள் முடக்குவதுதான் என்று புகார் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், கால் டிராப் பிரச்னைக்கு வரும் அக்டோபர் மாத மத்தியில் இறுதி முடிவு எடுக்கப்படும் என டிராய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ