Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் : வீட்டுக் கடன் 30 வருடங்கள் செலுத்தலாம்..!

எல்ஐசி ஹவுசிங்ஃபைனான்ஸ்

உங்கள் இல்லம் கண்காட்சி

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 18ஆம் ஆண்டு "உங்கள் இல்லம்" என்கிற சொத்துககள் கண்காட்சி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சுனிதா சர்மாவால் தொடங்கப்பட்டது.

இந்த சொத்துக்கள் (மனை, ப்ளாட், வீடுகள், வில்லாக்கள்) கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட பில்டர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்த கண்காட்சி செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில்  நடைபெறும். 
 
 
 
இந்த கண்காட்சியில் சிறிய பட்ஜெட் வீடுகள் முதல் விலை உயர்ந்த வில்லாக்கள், பங்களாக்கள் வரை இடம் பெற்றிருக்கின்றன. இந்த கண்காட்சியின் சிறப்பம்சமே எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் உடனடியாக கடன் வழங்குவதாகவும், கடனுக்கான செயல்முறை கட்டணத்தில் (Processing Fees) 5,000 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுவதாக எல்ஐசி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
 
இது மட்டுமின்றி இளைஞர்களுக்கு தங்கள் கனவு இல்லத்தை வாங்க, வாங்கும் கடன் தொகையை 30 வருடங்கள் வரை சிறிய இ.எம்.ஐ தொகையாக கடனை திருப்பி செலுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கிறது எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம். 
 
இந்த கண்காட்சிக்கு எந்த விட கட்டணமும் கிடையாது. அனுமதி இலவசம். உங்கள் இல்லத்தை தேர்ந்தெடுக்க இந்த "உங்கள் இல்லம்" கண்காட்சிக்கு சென்று பார்க்கலாமே.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close