Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விற்றுக்கொண்டிருந்தவர்கள் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்

பங்குச் சந்தையில் பங்குகளை விற்றுக்கொண்டிருந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பங்குகளை வாங்கி முதலீடு செய்ய தொடங்கியுள்ளன.


இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பலவும் கடந்த ஐந்து வருடங்களாக நிதி நெருக்கடி வரலாம் என்ற பதட்டத்தில் தங்கள் பங்குகளையெல்லாம் விற்று வந்தன. செபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நிதி ஆண்டு 11 லிருந்து நிதி ஆண்டு 15 வரையில், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 29 பில்லியன் டாலர் பங்குகளை விற்று வெளியேறியுள்ளன. அதில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே 24-25 பில்லியன் டாலர் பங்குகளை விற்றுள்ளன.


ஆனால் நடப்பு நிதி ஆண்டில் அவை பங்குகளை வாங்க தொடங்கியுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களால் 6.7 பில்லியன் டாலர் பங்குகள் வாங்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதில் 20% இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ