Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலைக் குறைவால் இறக்குமதி அதிகரிப்பு

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து இறக்குமதி செய்வது அதிகரித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 120 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டது ஆகஸ்ட் மாதத்தில்தான்.


தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதற்கு தங்கத்தின் விலைக்குறைவும், பண்டிகைக்கால தேவைகளுமே காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.


இதனால் இந்த நிதி ஆண்டில் கடந்த ஜூலை மாதத்தில் 89 டன்னாக இருந்த தங்கத்தின் இறக்குமதி, ஆகஸ்ட் மாதத்தில் 120 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் தங்கத்தின் இறக்குமதி 50 டன்னாக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ