Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொத்த விற்பனை விலை பணவீக்கம் மேலும் குறைந்தது

மொத்த விற்பனை விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4.95% ஆக குறைந்துள்ளது. கடந்த ஜூலையில் 4.05% ஆக குறைந்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 0.90% கூடுதலாகக் குறைந்துள்ளது.


இந்தச் சரிவிக்கு கச்சா எண்ணெய் விலை நிலை மற்றும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையே முக்கியக் காரணம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கச்சா எண்ணெயின் விலை கடந்த வருடத்தைக் காட்டிலும் 16.50% சரிவைச் சந்தித்துள்ளது. அதே போல் உணவுப் பொருட்களின் பணவீக்கமும் 1.13% கடந்த வருடத்தைக் காட்டிலும் குறைந்துள்ளது. உற்பத்தி பொருட்களின் விலையும் ஆகஸ்ட் மாதத்தில் 1.92% குறைந்துள்ளது.


இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, பணவாட்ட நிலையைச் சீர்படுத்தவும், அதே நேரத்தில் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி உயர்வு பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் தனது அடுத்த நாணய மறுஆய்வு கொள்கையைத் திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரிசர்வ் வங்கி தனது அடுத்த நாணய மறுஆய்வு கூட்டத்தை வரும் செப்டம்பர் 29ம் தேதி திட்டமிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close