Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜஸ்ட் டயல் பங்குகள் 14% உயர்வு: சர்ச் ப்ளஸ் ஆப் அறிமுகம்

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று ஜஸ்ட் டயல் பங்குகளின் விலை 14% உயர்ந்து வர்த்தகமானது. இதற்கு சமீபத்தில் அது அறிமுகப்படுத்திய சர்ச் ப்ளஸ் என்ற ஆண்ட்ராய்ட் ஆப்தான் காரணமாம்.


தேடுதலில் உதவி புரியும் சேவை நிறுவனமான ஜஸ்ட் டயல், மேலும் மக்களுக்குப் பயனுள்ள பல சேவைகளை வழங்குவதற்காக சர்ச் ப்ளஸ் என்ற பன்மை பயன்பாடுகளுள்ள ஆண்ட்ராய்டு ஆப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.


"தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சர்ச் ப்ளஸ் ஆப்பை ஆப்பிள் நிறுவன ஆப் ஸ்டோரிலும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் அறிமுகப்படுத்தப்படும்," என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் நிகர லாபம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 18% அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 28.11 கோடியாக இருந்த அதன் நிகர லாபம் 33.17 கோடியாக உயர்ந்துள்ளது.
இன்று (14.9.15) பங்குச் சந்தையில் ஜஸ்ட் டயல் நிறுவன பங்குகள் 14% உயர்ந்து 926.75 ரூபாய்க்கு வர்த்தகமானது. நேற்றைய சந்தை முடிவில் அதன் விலை ரூ. 816.35.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ