Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்னிந்திய மக்கள் விரும்பும் டாப் பிராண்டுகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான பிராண்டுகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

‘இந்தியாவின் மிகக் கவர்ச்சியான பிராண்ட்’ பட்டியலில் சோனி இடம் பிடித்துள்ளது. ‘அதிக கவர்ச்சியான பிராண்டாகத்’ தேர்வாகி உள்ள சோனி, அகில இந்தியப் பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளது. எல்ஜி தெற்கிலும், அகில இந்தியப் பட்டியலிலும் இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளன. சாம்சங்க் தெற்கில் 3 ஆவது இடத்தையும், அகில இந்தியப் பட்டியலில் இரண்டு இடங்கள் பின்தங்கியும் உள்ளது. தென் இந்தியாவின் 4 ஆவது கவர்ச்சியான பிராண்டான டெல், ஓரு இடம் முன்னேறி உள்ளது. ஹெவ்லெட் பேக்கார்ட் தென் இந்தியாவின் 5 ஆவது இடத்தை பிடித்ததோடு, அகில இந்தியப் பட்டியலில் மூன்று இடங்களும் முன்னேறி உள்ளது. தென் இந்தியாவில் 6 ஆவது இடத்தை பிடித்த நோக்கியா அகில இந்தியப் பட்டியலில் ஒரு இடம் கீழே இறங்கி உள்ளது.

டாடா தென்னிந்திய பட்டியலில் மூன்று இடங்கள் இறங்கி 7 ஆவது இடத்தில் உள்ளது. 8 ஆவது இடத்திலுள்ள பாட்டா அகில இந்தியப் பட்டியலில் ஆறு இடங்கள் முன்னேறி உள்ளது. தென்னிந்திய பட்டியலில் ஹோண்டா 9 ஆவது இடத்திலும், தேசியப் பட்டியலில் மூன்று இடங்கள் இறங்கியும் உள்ளது. தென் இந்தியாவில் 10 ஆவது இடத்தில் உள்ள ஆப்பிள் அகில இந்தியப் பட்டியலில் ஐந்து இடங்கள் முன்னேறி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் (பழைய பெயர் டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி) இந்த ஆய்வறிக்கையை வெளியிடும் டிஆர்ஏ தொலை தொடர்புத் துறை முக்கிய நிறுவனங்களுள் ஒன்றான காம்னிசண்ட் குழுமத்தின் ஓர் அங்கமாகும்.

இந்த மிகக் கவர்ச்சியான பிரண்ட் 2015 பட்டியலை டிஆர்ஏ, 36 குணங்களின் அடிப்படையில் விரிவாக அலசியுள்ளது. நடப்பு ஆண்டில் 15,000 மணி நேரக் களப்பணி ஆய்வில் இந்தியாவின் 16 நகரங்களில் உள்ள, 2,312 நுகர்வோர் விளைவுகளை ஏற்படுத்துவோர் ஈடுபடுத்தப்பட்டு 5 மில்லியன் தரவுப் புள்ளிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. வித்தியாசமான 17,000 பிராண்ட்களில் டாப் 1000 பிராண்ட்கள் இந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளன. 180 பக்கங்கள் அடங்கிய இந்த ஆய்வறிக்கையின் விலை ரூ 14,000/-. ஆய்விற்கு உட்படுத்தப்பட்டோரில் 29% பேர் சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி மற்றும் கோவை ஆகிய தென் பிராந்திய நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆய்வறிக்கை அறிமுகம் குறித்து டிஆர்ஏ-வின் சிஇஓ என் சந்திரமௌலி கூறுகையில் ‘தென்னிந்தியாவின் விருப்பங்கள் எப்போதுமே வித்தியாசமானவை. அகில இந்திய முன்னுரிமைகளை இவை பின்பற்றுவதில்லை. இந்தப் பிராந்தியத்தில் உள்ள டாப் 100 ஒப்பீடு, சிறு சிறு வேறுபாடுகளைக் காட்டினாலும், 1000 பிராண்ட்களை மொத்தமாக ஆய்வு செய்யும் போது அவை குறைந்தே காணப்படுகின்றன’ என்றார்.

எம்டிஆர், மோடோரோலா மோடோ, ஹமாம், ஆச்சி மசாலா, விப்ரோ, விகேசி, ஜாக்கி மற்றும் ஆவின் பால் ஆகியவை, தென்னிந்தியாவின் 100 அதிகக் கவர்ச்சியான பிராண்ட்களாக தேர்வாகி உள்ளன. ஆனால் இவை ஏனைய பிராந்தியங்களில் அதிகம் விரும்பப்படும் 100 பிராண்ட் பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் 1000 கவர்ச்சி பிராண்ட்களும் 230 பிரிவுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. அதிகபட்ச பிராண்ட் பிரிவுகளில் உணவு மற்றும் குளிர்பானம் துறை சார்ந்த 160 பிராண்ட்களும், எஃப்எம்சிஜி துறை சார்ந்த 145 பிராண்ட்களும், ஆட்டோமொபைல் துறை சார்ந்த 58 பிராண்ட்களும், ஆடைகள் துறை சார்ந்த 56 பிராண்ட்களும் இடம் பெற்றுள்ளன.

தேசிய அளவிலான பிராண்ட் கவர்ச்சிப் பிரிவில் எல்ஐசி (பிஎஃப்எஸ்ஐ), பாரத் பெட்ரோலியம் (எரிபொருள்), டோவ் (எஃப்எம்சிஜி), பெப்சி (எஃப்&பி), தாபர் (சுகாதாரப் பாதுகாப்பு), கூகுள் (இணையம்), பிரெஸ்டிஜ் (சமையலறைப் பொருட்கள்), பிர்லா சிமெண்ட் (தயாரிப்பு), பாட்டா (தனிநபர் துணைப் பொருட்கள்), சல்மான் கான் (தனி நபர்கள்), கேஎஃப்சி (சில்லரை), ஏர்டெல் (தொலைதொடர்பு), இன்டீகோ ஏர்லைன்ஸ் (போக்குவரத்து) ஆகியவை முக்கியமானவை.

- டேனியல்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ