Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழில்வாய்ப்புகளில் எந்த மாநிலமும் பிரமாதமில்லை: உலக வங்கி ஆய்வில் தகவல்

இந்தியாவில் தொழில்வாய்ப்புகள் மற்றும் தொழில் சீரமைப்புகள் குறித்து ஒரு ஆய்வை உலக வங்கி மற்றும் அரசு தொழில்துறை கொள்கை மற்றும் பரப்பு ஆணையமும் இணைந்து நடத்தியுள்ளது. இதில் எந்த மாநிலமும் முழுமையான வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.


இந்த ஆய்வறிக்கையில் மாநிலங்கள் சதவிகிதம் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன. முதலிடத்தில் குஜராத் உள்ளது. ஆனால் இதன் சதவிகிதம் 71 மட்டுமே. அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரபிரதேசம்  (70%), ஜார்கண்ட் (63%), சட்டிஸ்கர் (62%), மத்திய பிரதேசம் (62%), ராஜஸ்தான் (61%) மற்றும் ஒடிசா (52%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தொழில் வாய்ப்புகளையும் சீரமைப்புகளையும் ஏற்படுத்துவதில் மிக மெதுவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சமீபத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP