Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டீம்லீஸ், ஐபிஓ மூலம் ரூ.500 கோடி திரட்ட திட்டம்

மனிதவள சேவை நிறுவனமான டீம்லீஸ் ஐபிஒ மூலம் ரூ. 450-500 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஒப்புதல் பெறும் வரைவு திட்டத்தை செபியிடம் சமர்ப்பித்திருக்கிறது.


டீம்லிஸ் நிறுவனம், பொதுப் பங்கு விற்பனையை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் நிதியை, புதிய நிறுவனங்கள் வாங்குதல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், வொர்க்கிங் கேபிடல் நிதியை பலப்படுத்துதல் உள்ளிட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகமாகும்.


20ளீல் 40 பணியாளர்கள், 20 வாடிக்கையாளார்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இப்போது 8 மண்டல அலுவலகங்கள் மற்றும் 1,200 நபர்களுடன் இந்தியாவின் முக்கியமான நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது. தற்காலிக பணியாளர்களை நியமிப்பது, நிரந்தர பணியாளர்களை நியமிப்பது, சம்பள நடைமுறைகள் உள்ளிட்ட பலவிதமான மனிதவள சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ