Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதத்தைக் குறைக்குமா ரிசர்வ் வங்கி?

மொத்த விற்பனை விலை பணவீக்கம் குறைந்துள்ள நிலையில், சில்லறை பணவீக்கமும் குறைந்துள்ளது.

நுகர்வோர் விலை குறியீட்டெண் 3.66% ஆக குறைந்துள்ளதன் அடிப்படையில் சில்லறை பணவீக்கமும் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் 3.69%ஆக இருந்தது, ஆகஸ்ட் மாதத்தில் 3.66%ஆக குறைந்துள்ளது.

ஆனாலும் உணவுப் பொருட்களின் விலை 2.15% லிருந்து 0.05% அதிகரித்து 2.20%ஆக உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4.95% ஆக குறைந்துள்ளது. கடந்த ஜூலையில் 4.05% ஆக குறைந்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 0.90% கூடுதலாகக் குறைந்துள்ளது. இப்போது சில்லறை பணவீக்கமும் குறைந்துள்ளது

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்குமா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் செப்டம்பர் 17இல் அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகித மாற்றத்தில் எடுக்கும் முடிவைப் பொறுத்தே ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பைக் கணிக்க முடியும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ