Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேதாந்தாவின் முடிவால் 1000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்!

வேதாந்தா நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கோர்பா எனும் இடத்தில் உள்ள பால்கோ ஆலையை மூட முடிவு செய்துள்ளது. இதனால் அதில் பணிபுரியும் 1000 பேருக்கு வேலை போகும் நிலை உருவாகியுள்ளது.


தொழிலதிபர் அனில் அகர் வாலுக்குச் சொந்தமான வேதாந்தா குழும நிறுவனங்களுள் ஒன்றுதான் பால்கோ ஆலை. அலுமிலினிய உற்பத்திய செய்து வரும் அந்த ஆலையை, சர்வதேச சந்தையில் அலுமினியத்தின் விலை கடுமையாக சரிந்து வருவதாலும், சீனாவிலிருந்து அதிக அளவில் அலுமினியம் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதாலும் மூடி விடுவதென கடந்த மாதம் இந்நிறுவனம் முடிவு செய்தது
.


இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில தொழிலாளர் அமைச்சகத்துக்கும் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளுக்கும் பால்கோ நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது. சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுள்ள வேதாந்தா லிமிடெட் நிறுவனம் பால்கோ நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது. எஞ்சிய 49 சதவீத பங்குகள் அரசின் வசம் உள்ளன. இந்த ஆலையில் ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் அலுமினிய தகடுகள் மற்றும் காயில்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.


வேதாந்தா நிறுவனம், டிசம்பர் 8, 2015-க்குள் இந்த ஆலையை மூடிவிட்டு, மறு சீரமைக்க முடிவு செய்துள்ளது. அதற்கான அனுமதி கடிதம் அரசிடமிருந்து தொழில் தாவா தீர்வு சட்டம் 1947-ன் படி மூன்று மாதங்களுக்குள் அனுப்பப்பட்டு விடும்.


இந்த பால்கோ ஆலை மூடப்படுவதால் ஆயிரம் பேர் வேலையிழப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP