Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிராவிடன்ட் ஃபண்ட் உறுப்பினர்களுக்கு மொபைல் ஆப் அறிமுகம்

பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஒவ்வொரு பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் அதன் உறுப்பினர்களுக்கு மொபைல் ஆப் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். 


மத்திய அமைச்சர் பண்டாரு தாத்தரேயா, பணியாளர்கள் பிராவிடன்ட் ஃபண்ட் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கான அந்த மொபைல் ஆப் சேவை மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் வழியே யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் ஆக்டிவேஷன் சேவை ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.


அதன்படி உறுப்பினர்கள் தங்கள் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பரை எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலம் அதனை ஆக்டிவேட் செய்துகொண்டு அதன் மூலம் தங்கள் மாதாந்திர பிராவிடன்ட் ஃபண்ட் கணக்குகளைப் பார்த்துக்கொள்ள முடியும்.


மேலும் இதற்கான மொபைல் ஆப்-பை இபிஎஃப்ஓ (எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன்) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த மாதத்தில் இபிஎஃப்ஓ முதலீடு செய்ய துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ