Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 1.98 லட்சம் மில்லியனர்கள் இருக்கிறார்களாமே!

ந்தியாவில் அதிக சொத்து மதிப்புகளைக் கொண்ட நபர்கள் கிட்டதட்ட 1.98 லட்சம் பேர் உள்ளார்களாம். உலகளவில் அதிக மில்லியனர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது.


தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்து வந்ததும், திட்டமிடப்பட்ட தேர்தல் முடிவுகளும் நாட்டிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த 2014ஆம் ஆண்டில் ஏற்படுத்தியுள்ளன.
உலகளவில் உள்ள மில்லியனர்களில் 26.3% இந்தியர்கள், உலக மில்லியனர்களின் சொத்து மதிப்பில் இவர்களின் மதிப்பு 28.2%.


இந்த அறிக்கையில், “தேர்தலில் பிரதமர் மோடி செய்த பல முக்கிய சீரமைப்புகளால்தான் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை வளர்த்திருக்கிறது. அந்த நம்பிக்கைதான் பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எம்எஸ்சிஐ இண்டெக்ஸில் 21.9% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை சரிவு நாட்டின் பொருளாதார பற்றாக்குறை மற்றும் சில்லறை பணவீக்கம் ஆகியவற்றையும் கணிசமாக குறைத்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் 43.5 லட்சம் மில்லியனர்களும், ஜப்பானில் 24.5 லட்சம் மில்லியனர்களும் ஜெர்மனியில் 11.4 லட்சம் மில்லியனர்களும் மற்றும் சீனாவில் 8.9 லட்சம் மில்லியனர்களும் உள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ