Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு தகவல்களை வெளியிட வேண்டும்: செபி

இந்திய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது வழக்கம். அந்தத் தகவல்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என செபி உத்தரவு இட்டுள்ளது.


சமீபத்தில் அம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் பத்திரங்கள் சர்ச்சைக்கு உள்ளாகியதால் அதில் முதலீடு செய்திருந்த ஜேபி மார்கன் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செய்த முதலீடுகளைப் பெரும்பாலான முதலீட்டாளர்கள் வெளியே எடுத்தனர்.


இது போன்ற அவசர நெருக்கடிகளைத் தவிர்க்கவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும் செபி நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீடுகள் குறித்த தகவலை வெளியிட வேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சங்கமும் இன்று விவாதிக்க உள்ளது. இதில் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது குறித்து பொதுவான விதிமுறைகளை வகுக்கப்பட வேண்டும் என்று சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.


ஆனால் இது குறித்து கருத்தொற்றுமை ஏற்படவில்லை. நிறுவனங்களின் கடன் பத்திரங் களில் முதலீடு செய்வது என்பது தனிப்பட்ட நிறுவனங்களின் முடிவு, அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை அவர்களாகவே சரி செய்துகொள்ள வேண்டும். இதனை மியூச்சுவல் பண்ட் துறையின் பிரச்சினையாக மாற்றகூடாது என்று கருதுவதாக தெரிகிறது.


நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது, அவற்றின் தர மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டும் முடிவெடுக்கக் கூடாது. அதற்கென சில விதிமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கம் கருதுகிறது.


மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எந்தெந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கின்றன, அதன் தர மதிப்பீடு எப்போது குறைக்கப்பட்டது, கடன் பத்திரத்தில் முதலீடு செய்த திட்டம் கையாளும் தொகை எவ்வளவு, தரமதிப்பீடு செய்த பிறகு எவ்வளவு தொகை குறைந்திருக்கிறது என்பது உள் ளிட்ட தகவல்களையும் செபி கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ