Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஐடி மாணவர்களுக்கு 7,947 வேலை வாய்ப்புகள்: அள்ளி வழங்கிய ஐடி நிறுவனங்கள்

இந்தியாவிலுள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விஐடி கல்லூரி மாணவர்களுக்கு 7,947 வேலை வாய்ப்புகளைத் தர முடிவு செய்துள்ளன.


இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று விஐடி (வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) பல்கலைக்கழகம். இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் பலவும் இங்கிருந்துதான் கொத்து கொத்தாக மாணவர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டிருக்கின்றன.


தற்போது, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட், அக்செஞ்சர், விப்ரோ ஆகிய 5 முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சேர்ந்து மொத்தம் 7,947 வேலை வாய்ப்புகளை விஐடி கல்லூரி மாணவர்களுக்குத் தருவதாக தெரிவித்துள்ளன.


காக்னிசன்ட்- 1914, டிசிஎஸ்-1864; அக்செஞ்சர் -1472; இன்ஃபோசிஸ் -1456; விப்ரோ - 1241.

இந்தியாவிலே ஒரே கல்லூரியிலிருந்து 5 நிறுவனங்கள் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களை வேலைக்கு எடுப்பது இது முதன் முறை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ