Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க ஃபெடரல் வங்கி ஏன் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை?

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டத்தை உலகமே எதிர்நோக்கி இருந்தது. வட்டி விகிதத்தை உயர்த்தி விடுமோ என்ற பீதியில் சந்தைகள் இருந்தன. இந்நிலையில் ஃபெடரல் வங்கி வட்டி விகித்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. வட்டிவிகிதம் உயராத காரணத்தால் சர்வதேச சந்தைகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன.


அமெரிக்க ஃபெடரல் வங்கி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை மேம்பாடு குறித்து விவாதிக்க இரண்டு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் பொருளாதார நிலையை மேம்படுத்தும் பல திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சர்வதேச சந்தைகள் எதிர்பார்த்திருந்த வட்டி விகித உயர்வை குறைவான பணவீக்கம், நிலையற்ற சந்தை ஆகிய காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தற்போது வட்டி விகிதம் 0.25 சதவீதமாக உள்ளது.


அமெரிக்கா சந்தை மற்றும் வர்த்தகம் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையிலும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் செயல்பட திட்டமிட்டுள்ளதாக ஃபெட்ரல் வங்கி தலைவர் ஜேனட் யெல்லென் கூறியுள்ளார். ஏன்?


அமெரிக்கச் சந்தையில் எண்ணெய் விலை குறைவால் நாட்டின் மொத்த பணவீக்கம் 1.8 சதவிகிதத்தில் உள்ளது. மேலும் வங்கிகளில் குறைவான வட்டி விகிதத்திற்கு கடன் வழங்கப்படுவதால் அனைத்துத் துறைகளும் நல்ல அடைந்திருக்கிறது. அதேநேரத்தில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவும் குறைந்துள்ளது.


இந்த நிலையில் வட்டி விகிதத்தை உயர்த்தினால், சர்வதேச சந்தைகளில் பாதிப்பு அபரிமிதமாக இருக்கும். இந்த பாதிப்பு நிச்சயம் அமெரிக்க சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் டாலர் மதிப்பு உயரும், அடுத்து அமெரிக்காவின் இப்போதைய பொருளாதார நிலையிலும் பாதிப்பு ஏற்படும். இதனால் பணவீக்கத்தின் அளவு அதிகரிக்கும்.


இந்தக் காரணங்களுக்காகவே அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் சர்வதேச சந்தைகள் சரிவிலிருந்து தப்பித்தன. ஆனால் இதில் அமெரிக்காவுக்கும் ஆதாயமுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ