Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் 'ஸ்வச்ச பாரத்' வேலைக்காகவில்லை: 71% பேர்

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பல திட்டங்களில் தூய்மை பாரதம் 'ஸ்வச்ச பாரத்' திட்டமும் ஒன்று. அறிமுகப்படுத்தப்பட்ட நாட்களில் நாடு முழுவதும் பேசப்பட்ட இத்திட்டம் வெற்றியடையவில்லை என்று கருத்துக்கணிப்பில் 71% பேர் தெரிவித்துள்ளனர்.


சமூக வலைதளங்கள் வழியே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், நாட்டில் தூய்மை என்பதை எந்தளவுக்கு 'ஸ்வச்ச பாரத்' திட்டம் சாத்தியப்படுத்தியிருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 71% பேர் 'வேலைக்காகவில்லை' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ