Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்பிஐ புதிய கிரெடிட் கார்டு சிம்பிளிக்ளிக் எஸ்பிஐ கிரெடிட்!

 எஸ்பிஐ புதிய கிரெடிட் கார்டு 

சிம்பிளிக்ளிக் எஸ்பிஐ கிரெடிட்! 
 
இந்தியாவின் முன்னணி கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ சிம்பிளிக்ளிக் கிரெடிட் கார்டை  அறிமுகப்படுத்தியது. இப்போது  ஆன்லைனில் பொருள் வாங்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதனால் இ- காமர்ஸ் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆன்லைனிலே அனைத்துப் பொருட்களையும் வாங்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது. ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்காகவே சிறப்பு கிரெடிட் கார்டை எஸ்பிஐ அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் எஸ்பிஐ கார்டின் தலைமைச் செயல் அதிகாரி விஜய் ஜசுஜா அறிமுகப்படுத்தினார். 
 
அமேசான், கிளியர் டிரிப், ஃபே பர்னிஷ், ஃபுட் பண்டா, புக்மைஷோ, லென்ஸ்கார்ட், ஓலா கேப் ஆகிய ஏழு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சிம்பிளிக்ளிக் கார்ட் மூலமாக இந்த இணையதளங்களில் பொருட்கள் வாங்கும் போது இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியும். இந்த இணையதளங்களில் வருடத்துக்கு 2 லட்சம் ரூபாய்க்குப் பொருட்கள் வாங்கினால் 4 ஆயிரம் ரூபாய்  வவுச்சரை இலவசமாகப் பெற முடியும். 
முதன் முதலில் சிப்ளி க்ளிக் கார்ட் வாங்கும் போது ரூ. 499 கட்டணம் செலுத்த வேண்டும்.  வாடிக்கையாளருக்கு கார்டுடன் ரூ. 500 மதிப்புள்ள அமோசன் இ வவுச்சர் இலவசமாகக் கிடைக்கும். மேலும் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது இரண்டாம் ஆண்டு புதுப்பிக்கும் கட்டணம் இல்லை. ஒவ்வொரு முறை ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போதும் 5X ரிவார்டு பாயின்டுகள் கிடைக்கும். 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ