Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிரடி வரி உயர்வால் அரசுக்கு ரூ. 36,500 கோடி கூடுதல் வருமானம்

மத்திய அரசுக்கு வரி மூலம் வரும் வருமானத்தை அதிகரிக்க, அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அதன் பலனாக கடந்த ஐந்து மாதத்தில் 36,500 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது. இதில் ரூ. 30,000 கோடி பெட்ரோல், டீசல் மூலமாக மட்டுமே கிடைத்துள்ளது.


பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கான கலால் வரி உயர்த்தப்பட்டதால் மத்திய அரசுக்கு ரூ.30,000 கோடி வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது. இந்தத் தொகை கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத காலத்தில் கிடைத்துள்ளது.


மத்திய அரசு அடிக்கடி வரிகளை உயர்த்தி வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி 2015 வரை நான்கு முறை பெட்ரோல், டீசலின் கலால் வரி உயர்த்தப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில் கிடைத்த கலால் வரி வருமானம் 1.02 லட்சம் கோடி ரூபாய். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 69.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ