Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைரத்தின் மீது பெண்களுக்கு மோகம்: இறக்குமதியில் இந்தியா 3ம் இடம்

இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது மட்டுமல்ல, வைரத்தின் மீதும் நல்ல மோகம் உள்ளது. வைரம் இறக்குமதியில் உலக அளவில் இந்தியாவுக்கு 3ம் இடம். உலகளவில் இறக்குமதி செய்யப்படும் வைரத்தில் 8% இந்தியாவில் இறக்குமதியாகிறது.


முதலிடத்தில் உள்ள அமெரிக்கா அதிகபட்சமாக 42% வைரத்தை இறக்குமதி செய்கிறது, அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள சீனா, 16% வைரத்தை இறக்குமதி செய்கிறது.


இந்தியாவில் ஒவ்வோராண்டும் இறக்குமதியாகும் வைரத்தின் அளவு அதிகரித்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில் 2014 இறுதி வரையில் ரூ. 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வைரம் இறக்குமதியாகியுள்ளது. 2013இல் இந்தியப் பெண்கள் 25 லட்சம் வைர நகைகளை வாங்கியுள்ளனர். இது 2012ஆம் ஆண்டை காட்டிலும் 6 மடங்கு அதிகம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ