Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிமென்ட் விலை உயர்வு: ரியல் எஸ்டேட் பாதிப்பு காரணமா?

ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், சிமென்ட்டுக்கான தேவையும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக சிமென்ட்டின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 20-40% வரை சிமென்ட் விலை அதிகரித்துள்ளது.


நகர்மயமாக்கம் அதிகரித்து வருவதாலும், ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் வந்து கொண்டிருப்பதாலும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரியல் எஸ்டேட் துறை வளர்ந்தால் சிமென்ட்டுக்கான தேவை அதிகரிக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. ரியல் எஸ்டேட் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது.

இதனால் சிமென்ட்டுக்கான தேவை பெருமளவில் குறைந்து வருவதால் அதன் விலை அதிகரித்துள்ளது. நொய்டாவில் ஜூலை மாதம் 50கி சிமென்ட் பை ரூ. 200க்கு இருந்தது, செப்டம்பர் மாதம் ரூ. 285ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் ஜூலை மாதம் 300ஆக இருந்தது செப்டம்பரில் 400ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே அடிவாங்கியுள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு இது மேலும் ஒரு சோகம் தான்.


இது குறித்து பில்டர் அமைப்பு காம்படிஷன் கமிஷன் ஆஃப் இண்டியாவிடம் புகார் பதிவு செய்துள்ளது. இதே போன்ற ஒரு புகாரை சென்ற வருடமும் அது பதிவு செய்துள்ளது குறிப்பிடத்த
க்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ