Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காப்பீடு வேறு, முதலீடு வேறு! - காஞ்சிபுரத்தில் குவிந்த முதலீட்டாளர்கள்

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தமிழகம் முழுக்க விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்தி வரும் நாணயம் விகடன், தற்போது இன்டகிரேடட், என்சிடிஎல் மற்றும் என்எஸ்இ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 'அஸெட்  அலோகேஷன் - செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா' என்னும் நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கி இருக்கிறது. இதன் முதல் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 13-ம் தேதி அன்று நடந்தது.

 

 

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சுரேஷ் பார்த்தசாரதி, ‘‘நம் முதலீடுகள் குழந்தைகள் கல்விக்கு, திருமணத்துக்கு, நமது ஓய்வுக்கால தேவைக்கு என பிரித்து செய்யப்பட வேண்டும். இந்த முதலீடுகள் அனைத்தும் பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் தருகிற மாதிரி  இருக்கவேண்டும்'' என்றார்.

 

இவரைத் தொடர்ந்து பேசிய  இன்டகிரேடட் என்டர்பிரைசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீராம் வைத்தியநாதன், ''தங்கத்தையும் நிலத்தையும் வாங்கி அதிக ஆண்டுகள் வைத்திருக்கிற மாதிரி பங்குகளையும் நாம் வைத்திருக்க வேண்டும்'' என்றார்.

 

 

என்எஸ்டிஎல் அமைப்பின் உதவி துணைத் தலைவர் பந்தன் ஸ்ரீநிவாஸ், என்எஸ்டிஎல் அளித்து வரும் பல்வேறு சேவை கள் பற்றியும், என்எஸ்இ-ன் முதன்மை மேலாளர் சுதாகர்,  பங்குச் சந்தை முதலீட்டாளருக்கு என் எஸ் இ அளித்துவரும் பாதுகாப்பு வசதிகள் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

 

 

இந்தக் கூட்டத்தில் பேசிய  ஐஇபி இன்ஷூரன்ஸ் புரோக்கிங் சர்வீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த குருமூர்த்தி.  ''இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்குச் செலுத்தும் பிரீமியத்தை முதலீடாகக் கருதக் கூடாது. அதேபோல,  சேமிப்புக் காக இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கக்கூடாது'' என்று கூறினார்.

கடைசியாகப் பேசிய பங்குச் சந்தை நிபுணர் ஜி.மாறன்,  ''பிசினஸ் செய்வதாக நினைத்துத் தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அது சிறந்த முதலீடாக இருக்கும்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட குழந்தைகளுக்கு ஒரு உண்டியலை வழங்கியது இன்டகிரேடட் நிறுவனம். அதை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

 

படங்கள்: ப.சவரணகுமார்.

இரா.ரூபாவதி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ