Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஏசிஎல்-க்கு ரூ. 7269 கோடி அபராதம்: செபி நெத்தியடி

செபி வரலாற்றிலேயே அதிக அபராதத்திற்கு ஆளாகியுள்ளது பிஏசிஎல் நிறுவனம். மொத்தம் 5.85 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.49,100 கோடி பணத்தைச் சுருட்டிய நிறுவனம் தான் பி.ஏ.சி.எல்.


ஜெய்ப்பூரைச் சேர்ந்த பி.ஏ.சி.எல் என்ற நிறுவனம், "கூட்டு முதலீட்டு திட்டங்கள்"-இன் கீழ், 15 ஆண்டுகளில் நிலங்கள் வாங்கித் தருவதாக சொல்லி 5.85 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து மொத்தம் ரூ. 49,100 கோடி பணத்தைத் திரட்டியது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் திரட்டப்பட்ட மிகப்பெரிய தொகை இது.


ஆனால் இந்தத் தொகையை, எந்த அதிகாரபூர்வ ஒப்புதலும் இல்லாமல் 15 ஆண்டுகள் மோசடி செய்து திரட்டியது செபி அமைப்புக்கு தெரிய வந்தது. இதனையடுத்து பிஏசிஎல்-க்கு எதிராக செபி கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தது. சமீபத்தில் செபி அமைப்பு, மக்களிடமிருந்து திரட்டிய மொத்த பணத்தையும் அவர்களிடமே திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டது.


இப்போது செபி அமைப்பு அந்நிறுவனத்திற்கு ரூ. 7269 கோடி அபராதம் விதித்துள்ளது. செபி வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படவில்லை.

பிஏசிஎல்-இன் நான்கு இயக்குனர்களும் -தர்லோச்சன் சிங், சுக்தேவ் சிங், குர்மீத் சிங் மற்றும் சுப்ரதா பட்டாசார்யா- முறைகேடாக ரூ. 2,423 கோடி லாபம் பெற்றுள்ளனர். செபி நிபந்தனைகளின் படி முறைகேடாக சேர்த்த லாபத்தின் மூன்று மடங்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் வகையில் பிஏசிஎல் நிறுவனத்தைப் பற்றிய அலசல் கட்டுரைகள் எழுதப்பட்டன. அவற்றைப் படிக்க கீழே உள்ள லிங்கைச் சொடுக்கவும்.

bit.ly/1MIlcFf

bit.ly/1PrOPrW

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ