Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மேக் இன் இந்தியா' வெர்ஷன் 2.0 - மோடியின் அடுத்த அறிவிப்பு

பிரதமர் மோடி இந்திய உற்பத்தி துறையை மேம்படுத்தும் நோக்கில் 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தினார். ஆனாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியவில்லை. இந்நிலையில் மத்திய அரசு 'மேக் இன் இந்தியா 2.0' திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது,


மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் மேக் இன் இந்தியா திட்டத்தின் 2வது பாகத்தை மேக் இன் இந்தியா 2.0 என வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேக் இன் இந்தியா திட்டத்தில், உற்பத்தித் துறையில் புதிய வர்த்தகம் மற்றும் வர்த்தக வரிவாக்கம் செய்துகொள்ள தேவையான வழிமுறைளையும் விதிமுறைகளையும் எளிமை படுத்தியது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இப்போது இன்னும் சில மாதங்களில் வெளியிட உள்ள மேக் இன் இந்தியா 2.0 திட்டத்தில் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கும், அதற்கான திறன்களை இந்தியாவிலும், இந்திய மக்களிடமும் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ