Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பக்ரீத் முன்னிட்டு இன்று சந்தை விடுமுறை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நேற்றைய வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தன. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஏற்றம் இல்லையென்றாலும், இறக்கத்தில் தொடங்கியச் சந்தைகள் மாலை ஏற்றத்துடன் வர்த்தகமாயின. சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 22 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்தன.

தகவல் தொழில்நுட்ப துறை, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எப்எம்சிஜி ஆகிய துறைகளின் குறியீடுகள் உயர்ந்து வர்த்தகமாயின. லுபின், கெயில், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஐடிசி ஆகிய பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பக்ரீத்தை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close