Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவை விட இந்தியாவில் இன்டர்நெட் சேவை மலிவாமே!

இணையம் உலகைக் கைக்குள் அடக்கி விடுகிறது. ஆனால் அந்த இணையச் சேவையைப் பெறுவதில் பல சிக்கில்கள் இனிவரும் காலங்களில் எழுவதற்கு வாய்ப்புள்ளது. சமீபத்தில் கிளம்பிய நெட் நியூட்ராலிட்டி விவகாரமே அதற்கு சான்று.

இன்டர்நெட் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையில்தான் இப்போது நாமெல்லாம் இருக்கிறோம். மாதத்திற்கு இணையத்திற்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்று நாம் கணக்குப் பார்த்திருக்கிறோமா? பெரும்பாலானோரிடம் இல்லையென்ற பதில்தான் இருக்கும்.


ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவை காட்டிலும் இந்தியாவில் இன்டர்நெட் சேவை குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது என்று ஏர்செல் தென் பிராந்திய வர்த்தக பிரிவின் தலைவர் சங்கர் நாராயாணன் கூறியுள்ளார். அமெரிக்காவில் ஒரு ஜிபி இணைய சேவை பெறுவதற்கு 40 டாலர் (ரூ. 2646.54). அதுவே இந்தியாவில் ரூ.250-300க்கு ஒரு ஜிபிக்கும் மேலான இணைய சேவையைப் பெற முடியும். அமெரிக்க டாலரில் 3-4 டாலர்தான்.

என்ன இருந்தாலும் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றா என்ன?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ