Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்விக் கடன் வட்டிக்கு தள்ளுபடி உண்டா?

 2008-ல் கல்விக் கடன் வாங்கிய வர்களுக்கு வட்டி தள்ளுபடி உண்டா?

சுஜாதா நடராஜன்,
ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.
‘‘கல்விக் கடன் வாங்கியவர்களுக் கான வட்டி தள்ளுபடி 2009-10-ம் நிதி ஆண்டில் 1.4.2009-க்குபின் கல்விக் கடன் வாங்கிய மாணவர்களுக்கு மட்டும் பொருந்துவதாக உள்ளது. முழுவட்டி தள்ளுபடியானது, படிக்கும் காலத்துக்கும், படிப்பை முடித்தபிறகு வருகிற ஒரு வருடம் அல்லது வேலையில் சேர்ந்தபிறகு ஆறு மாதம் வரைக்கும் கிடைக்கும். இந்தச் சலுகைகள் பெற்றோர் / குடும்ப மொத்த ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவாக உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், 2008-ல் கடன் வாங்கியவர்களுக்கு எந்தச் சலுகையும் இப்போது இல்லை.’’

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ