Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முத்ரா திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில்களுக்கு ரூ. 1.22 லட்சம் கோடி கடன்: ஜெட்லி

2016 நிதி ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 1.22 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அரசு நிர்ணயம் செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.


இந்தியாவில் தொழில்முனையும் ஆர்வம் இருந்தாலும் பெரும்பலானோருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மத்திய மாநில அரசும் முடிந்தவரை அதற்காக முயற்சித்து வருகிறது. இதுவரை மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் 37 லட்சம் தொழில் முனைவோர்களுக்கு 24,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை மேலும் அதிகரித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அருண் ஜெட்லி பல தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்குவதற்கான கடிதத்தை வழங்கினார்.


அப்போது பேசுகையில், " வரும் மார்ச் 2016க்குள் 1.22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். 1.25 கோடி முதல் 1.75 கோடி வரை சிறு நிறுவனங்களுக்கு கடன் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கடன் வாங்குபவர்கள் பிணையாக எதையும் சமர்ப்பிக்கத் தேவை யில்லை. சிறிய தொழில் முனை வோர்கள் எப்படி பணத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கடன் வழங்கப்படும்" என்று கூறினார்.

இந்த முத்ரா திட்டத்தின் கீழ் சிறு தொழில்களுக்கு ரூ. 50,000வரை கடன் வழங்கப்படும். மேலும் சிறு மற்றும் குறு என்டர்பிரைசஸ் தொழில்களுக்கு 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு வங்கியல்லாத ஒரு நிதி நிறுவனம் மற்றும் சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் ஒரு பகுதியும் அடுத்த வருடத்தில் வங்கி போன்ற அமைப்பாக மாற்றப்படும்.

சிறு கடைகள், பழக்கடை, காய்கறிக் கடை, சலூன் கடை, மெக்கானிக் ஷாப் போன்ற தொழில்கள் இவற்றில் அடங்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ