Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாட்டினர் லாபம் பார்க்க இந்தியர்கள் வேடிக்கைப் பார்க்கிறோம்!

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து 'வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற தலைப்பில் விழிப்பு உணர்வு கூட்டத்தை திருப்பூரில் செப்டம்பர் 26-ம் தேதி நடத்தியது.


 

அதில் பேசிய ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள தலைவர் எஸ்.ஹரிஷ்,  ''சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமில்லாமல்லாமல் திருப்பூர் போன்ற சிறிய நகரங்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு அவசியம். சிறிய நகரங்களில் ரியல் எஸ்டேட், தங்க முதலீடு தாண்டி பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு வருவதில்லை.

பணவீக்கத்தைத் தாண்டி லாபம் தரக்கூடிய சக்தி பங்குச் சந்தைக்கு உண்டு என்கிற விவரம் தெரியாமல் பலர் இருப்பதால்தான்  இந்தியாவில் பங்குச் சந்தையில் 2% பேர் மட்டுமே முதலீடு செய்துள்ளனர். வெளிநாட்டினர் இந்திய பங்கு சந்தையில் அதிக முதலீடு செய்து லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்கள் நாம் வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

 

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரான சொக்கலிங்கம் பழனியப்பன் பேசும் போது, "தொழில் செய்யும் மனநிலையில் முதலீடுகளைச் செய்யக் கூடாது. அப்படி முதலீடு செய்துதான் ஈமு கோழி, ஃபாரக்ஸ் என்று பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதனால் ஆர்வக்கோளாறும் அவசரமும் இல்லாமல் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திட்டமிட வேண்டும். ஒரு மராத்தான் ஓட்டக்காரரைப் போல முதலீட்டாளர்கள் தங்களின் இலக்கை நீண்ட காலமாக நிர்ணயித்தால் அதிக லாபம் பெறலாம்" என்றார்.


- ஜெ.சரவணன்
படங்கள்: க. சத்தியமூர்த்தி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ