Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுந்தர் பிச்சை, மோடியைச் சந்தித்தார்: என்ன பேசினார்?

எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் இந்தியா, ஃபேஸ்புக்கில் பலரது புகைப்படமும் இன்று 'டிஜிட்டல் இந்தியா ஆதரவு' மயம்தான். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் புதிய சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.  எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் இந்திய முக்கிய பங்கு வகிக்கும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


சுந்தர் பிச்சை பேசுகையில், "இந்தியாவை தொழில்முனைவுக்கு ஏற்ற இடமாக மேம்படுத்த பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை. பல விஷயங்கள் மோடியின் செயல்பாடுகளால் சாத்தியமாகியுள்ளன. மோடி தொழில்நுட்பத்தை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார். அதை பெரிய அளவில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துவருகிறார்.


இந்தியாவில் 3000-க்கும் அதிகமான புதிய நிறுவனங்கள் உள்ளன. பல அம்சங்களின் அடிப்படையில் புதிய நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவது இந்தியாவில் மட்டும்தான். பிளிப்கார்ட், ஹைக், ஜொமேடோ, ஸ்நாப்டீல் ஆகிய சில நிறுவனங்கள் இதற்கு உதாரணங்கள். இவை சர்வதேச அளவில் வெற்றி நிறுவனங்கள் ஆகும். இந்நிறுவனங்கள் மூலம் பல வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.


இந்தியாவில் நடந்து வரும் இதுபோன்ற தொழில்முனைவு நடவடிக்கைகள் குறித்து கூகுள் பெருமை கொள்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இணைந்து பங்கேற்ற விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.


விரைவில் கூகுள் தலைமையகத்துக்கு மோடி வருவார் என்றும், அப்போது பல திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ