Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று சந்தை 247 புள்ளிகள் சரிவு: காரணம் இதுதானா?

வாரத்தின் முதல் நாளான இன்று (28.9.15) இந்தியப் பங்குச் சந்தை முடிவில் 247 புள்ளிகள் குறைந்து சரிவில் முடிந்தது. நாளை இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கலந்தாய்வு கூட்டம் நடக்கவுள்ள நிலையில் இன்று பல பங்குகள் விற்கப்பட்டு முதலீடுகள் வெளியேறின.


நாட்டின் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ள கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் 25 அடிப்படை புள்ளிகள் வரையிலாவது குறைக்கும் என்று அறிவிப்புகள் வெளியாகியது.

இதனையடுத்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளவிலான தங்களது பங்குகளை விற்று முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர்.
இதனால் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 246.66 புள்ளிகள் சரிந்து 25,616.84 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிப்டி குறியீடும் 72.82 புள்ளிகள் சரிந்து 7,795.70 புள்ளிகளை அடைந்தது.


ஏர்டெல் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 52 வாரச் சரிவை சந்தித்து, சந்தையின் முன்னணி நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ