Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு: வட்டிவிகித குறைப்பு உறுதியில்லை என்பதே காரணம்

காலை 10.30 மணி நிலவரம்


இந்திய பங்குச் சந்தைகள் இன்று (29.09.2015) காலை 10.30  மணியளவில் இறக்கத்தில் வர்த்தகமாகிறது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 316.41 புள்ளிகள்  குறைந்து 25,300.43 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 99.85 புள்ளிகள் குறைந்து 7,695.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     


இன்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் நடக்கவுள்ளது. வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டிவிகிதத்தைக் குறைக்க வேண்டுமென்று பரவலாக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்கும் என்று உறுதியாக தெரியவில்லை. இதனால் இன்று சந்தை இறக்கத்தில் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ