Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரெப்போ வட்டி விகிதம் 0.50% குறைப்பு: இன்ப அதிர்ச்சி



ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 % குறைத்துள்ளது .இப்போது ரெப்போ வட்டி விகிதம் 6.75 சதவிகிதமாக உள்ளது. ரொக்க கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவிகிதமாக உள்ளது.


ஜனவரி 2015 லிருந்து இது நான்காவது வட்டி விகித குறைப்பாகும். ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் பங்குச் சந்தையில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

0.25 சதவிகிதம்தான்  ரெப்போ வட்டி விகித குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் 0.50 % குறைத்துள்ளது வங்கிகள் மற்றும் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது


காலை 10.30 மணியளவில்   சென்செக்ஸ் புள்ளிகள்  316.41  குறைந்து    25,300.43 என்ற நிலையில் வர்த்தகமானது.  ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து 11.30 மணியளவில் சென்செக்ஸ் 25496.85  ஆக உயர்ந்துள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ