Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா பொருளாதார தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறியது

கடந்த சில வருடங்களாகவே உலகளவில் பொருளாதார தரவரிசையில் பின்னோக்கி போய்க்கொண்டிருந்த இந்தியா இந்த ஆண்டு தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறியுள்ளது.

உலக பொருளாதார கருத்தரங்கம் ஒவ்வோராண்டும் நடைபெறும். அக்கருத்தரங்களில் உலக நாடுகளின் பொருளாதார தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்படும். இப்பட்டியலில் கடந்த வருடம் 71ஆவது இடத்தில் இருந்த இந்தியா 16 இடங்கள் முன்னேறி 55ஆவது இடத்தில் உள்ளது. (2013ல் 60 வது இடத்திலும்; 2012ல் 59வது இடத்திலும்; 2011ல் 56வது இடத்திலும், 2010ல் 49வது இடத்திலும் இருந்தது.

இந்த முன்னேற்றம் இந்தியாவுக்கு நல்ல அறிகுறி என்று பலரும் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு தற்போதுள்ள மோடி தலைமையிலான மத்திய அரசின் பல திட்டங்கள்தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ