Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ. 3770 கோடி கருப்பு பணம்: தானாக முன்வந்து தகவல்

இந்தியாவில் ரூ. 3770 கோடி கருப்புப் பணம் வைத்திருப்பதாக 638 பிரமாணப் பத்திரங்கள் மூலம் தாமாக முன்வந்து தகவல் கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர வேண்டி மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் கருப்பு பணம் குறித்த தகவல்களைத் தாமாக வந்து பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பை அடுத்து நேற்றோடு அதற்கான காலக்கெடு முடிந்தது. இந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக தாமாக முன் வந்து கொடுத்த 638 பிரமாண பத்திரங்களிலிருந்து 3770 கோடி ரூபாய் கருப்பு பணத்திற்கான தகவல்கள் கிடைத்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ