Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மானியமல்லாத கேஸ் சிலிண்டர் ரூ.42 குறைப்பு

சர்வதேச அளவில் கேஸ் விலை 16% குறைக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் மானியமல்லாத சமையல் எரிவாயுவின் விலையை 7.5% குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 14.2கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை 559.50 ரூபாயிலிருந்து 517.50 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் 19.2கிலோ எல்பிஜி சிலிண்டர் 4.2% விலைக்குறைக்கப்பட்டு 963 ரூபாயாக உள்ளது.

மானிய சிலிண்டர் விலை மாறாமல் 417.82 ரூபாயாகவே தொடர்கிறது. மேலும் டீசல் விலையும் லிட்டருக்கு 0.50 பைசா குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமில்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP