Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செபியிடம் முறையிடப்பட்ட புகார்கள் 56%ஆக குறைந்தது

சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் செய்யப்படும் புகார்கள் 2015-16 நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 56 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் செபியிடம் முறையிடப்பட்ட புகார்கள் 76%ஆக இருந்தது.


செபியிடம் இந்த நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் 8,703 புகார்களை முதலீட்டாளர்கள் முன்வைத்துள்ளனர். அவற்றில் 4,836 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளதன் மூலம் புகார்களின் அளவு 56%ஆக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலாண்டில் வந்த புகார்களின் எண்ணிக்கை 8,749 ஆகும். அதில் தீர்வுகள் காணப்பட்டது போக 6,670 புகார்கள் இருந்தன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ