Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விற்பனை குறைந்த பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செப்டம்பர் மாத விற்பனை 3.76 சதவிகிதம் குறைந்திருக்கிறது. செப்டம்பர் 2015ல் மட்டும்  இருசக்கர மற்றும் வணிக வாகங்களை சேர்த்து மொத்தம் 3,84,400 வாகனங்களை விற்றிருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு இதே மாதம் மொத்தமாக 3,99,450 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. 

2015 செப்டம்பர் மாத காலத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 4.83 சதவிகிதம் குறைந்திருக்கிறது.வணிக வாகனங்களின் விற்பனை 3.30 சதவிகிதம் விற்பனை அதிகரித்திருக்கிறது. அதாவது 2015 செப்டம்பரில் 54,172 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. 
 
2015 செப்டம்பர் மாதம் 1,73,801 வாகனங்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். 2014 செப்டம்பரில் ஏற்றுமதி செய்ததை விட 0.23 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் என்.எஸ்.இ யில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் 3.11 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. பி.எஸ்.இ யில் 2.90 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ